ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் 61,282 பேர் வெள்ள உதவி நிதி பெற்றனர்

ஷா ஆலம், பிப் 10 – நேற்று  காலை 10.00 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  61,282 குடும்பங்களுக்கு  பந்துவான் சிலாங்கூர் பங்கிட்  திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவித் திட்டத்திற்காக இதுவரை சுமார் 6 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிள்ளான் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 28 லட்சத்து 73 ஆயிரம் வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இம்மாவட்டத்தில் உதவித் தொகை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தனது டிவிட்டர் பதிவில்  தெரிவித்தார்.

உதவி நிதி பகிர்ந்தளிப்பு தொடர்பான விளக்கப்படத்தையும் அமிருடின் தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வெள்ளப் பேரிடரில் உயிரிழந்த  13 பேரின் குடும்பங்களுக்கும் தலா 10,000 நிதியுதவி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார் .

கிள்ளான் மாவட்டத்தில் 16,843 குடும்பங்களுக்கு இதுவரை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பெட்டாலிங் (15,435 குடும்பங்கள்) மற்றும் கோல லங்காட் (9,079 குடும்பங்கள்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

மேலும், உலு லங்காட்டில் 7,834 குடும்பங்களுக்கும் சிப்பாங்கில் 6,273 குடும்பங்களுக்கும் கோல சிலாங்கூரில் 4,791 குடும்பங்களுக்கும் கோம்பாக்கில் 893 குடும்பங்களுக்கும்  உலு சிலாங்கூரில் 94 குடும்பங்களுக்கும் சபாக் பெர்ணமில்  40 குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.


Pengarang :