ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜூன் மாதம் முதல் மொத்தம் 4,186 ஒப்பந்த மருத்துவர்கள் நிரந்தரப் பதவிக்கு நியமிக்கப்படுவர்

ஷா ஆலம், பிப் 10: மலேசியாவின் சுகாதார அமைச்சகத்தின் (MOH) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மொத்தம் 4,186 மருத்துவ, பல் மற்றும் மருந்தியல் அதிகாரிகள் வரும் ஜூன் மாதம் முதல் நிரந்தரப் பதவிகளில் நியமிக்கப்படுவார்கள்.

நிரந்தர நியமனங்களில் 3,586 மருத்துவ அதிகாரிகள், 300 பல் மருத்துவர்கள் மற்றும் 300 மருந்தாளுநர்கள் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இது தவிர, 2023 முதல் 2025 வரை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1,500 மருத்துவ அதிகாரிகளை நியமிக்கவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

சுகாதார சேவைகளை மேம்படுத்த, 2023 முதல் ஒவ்வொரு ஆண்டும் MOH இல் 800 நிரந்தர மருத்துவர்கள் மற்றும் 70 பல் மருத்துவர்களை நியமிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று அவர் இன்று ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பின் மூலம் கூறினார்.

இந்த நடவடிக்கையின் மூலம், 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருந்தியல் அதிகாரிகளுக்கான 8,686 நிரந்தர பணியிடங்கள் நிரபப்படும் என்று கைரி கூறினார்.

முன்னதாக, ஒப்பந்த மருத்துவர்களுக்கு அரசு நிரந்தர பணியிடங்களை வழங்காததை கண்டித்து, கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி முதல் ‘’ஹர்த்தால் டாக்டர்’’ என்னும் நாடு தழுவிய போராட்டத்தின் வழி, மருத்துவ பணியாளர்கள் கடும் தொழில்  நிறுத்த நடவடிக்கை எடுத்ததை நாடு அறியும்..


Pengarang :