ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்க தடுப்பூசியை உடனடியாக பெற்றுக் கொள்ளுங்கள் – மந்திரி புசார் அறிவுறுத்து

ஷா ஆலம்,பிப் 15: சினோவாக் தடுப்பூசியைப் பெற்ற சிலாங்கூர் மாநில மக்கள் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன் பூஸ்டர் எனப்படும் ஊக்க தடுப்பூசியை எடுக்க வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் நினைவுபடுத்தினார்.

சினோவேக் தடுப்பூசி பெற்றவர்கள் மார்ச் 1 ஆம் தேதிக்கு முன் ஊக்க தடுப்பூசியை எடுக்கவில்லை என்றால் அவர்களின் தடுப்பூசி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று மலேசிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

“சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் பாதுகாப்புக்காக உடனடியாக ஒரு ஊக்க தடுப்பூசியைப் பெற நினைவூட்ட படுகிறார்கள்,” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று பேஸ்புக்கில் கூறினார். பிப்ரவரி 7 அன்று, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சினோவாக்கின் முழு அளவைப் பெறுபவர்கள் முழுமையான தடுப்பூசி நிலை பராமரிக்க மார்ச் 1 ஆம் தேதிக்கு முன் ஊக்க தடுப்பூசியை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அவ்வாறு செய்யத் தவறினால், தடுப்பூசி பெற்றதற்கான தகவல் மைசெஜாத்ரா செயளி பயன்பாட்டு சான்றிதழ் முழுமையடையாத தாகக் கருதப்படும் என்று முன்பு சுகாதார அமைச்சர் கூறியதை நினைவுறுத்தினார். *


Pengarang :