ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 22,133 ஆக உயர்வு

ஷா ஆலம், பிப் 14– நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்வு கண்டது. மொத்தம் 22,133 பேர் இன்று அந்நோய்த் தொற்றுக்கு இலக்கான வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 21,072 ஆக இருந்தது.

இன்று பதிவான மொத்த நோய்த் தொற்றுகளில் 21,987 அல்லது 99.34 விழுக்காடு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

எஞ்சிய சம்பவங்கள் கடும் பாதிப்பைக் கொண்ட மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்றைய புதிய தொற்றுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 83 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.

ஒன்று முதல் ஐந்தாம் கட்டம் வரையிலான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்கள் எண்ணிக்கை மற்றும் விழுக்காடு வருமாறு-

1 ஆம் கட்டம் – 5,831 சம்பவங்கள் (26.34%)

2 ஆம் கட்டம் – 16,156 சம்பவங்கள் (73%)

3 ஆம் கட்டம் – 102 சம்பவங்கள் (0.46%)

4 ஆம் கட்டம் – 24 சம்பவங்கள் (0.11%)

5 ஆம் கட்டம் – 29 சம்பவங்கள் (0.09%)

கடந்த பிப்ரவரி மாதம் 11 கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை திடீர் அதிகரிப்பை பதிவு செய்து 20,939 ஆனது. அதற்கு முந்தைய தினம் 1,844 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.


Pengarang :