ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நல்லவர் வேஷமிட்டு அம்னோ இந்தியர்களை கழுத்தறுத்து விட்டதை மறைத்து நீண்ட நாட்களாக சுய வாழ்வுக்காக வேஷமிடும் கூட்டம்.

கிள்ளான் பிப் 15 ;- இவ்வாண்டில் ரமலான் சந்தை உட்பட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளதை வரவேற்கிறேன். ஆனால், தைப்பூசத்திற்கு பக்தர்கள் காவடிகளை உருவாக்கிய பின், வியாபாரிகள் பலகாரங்களை தயார்செய்து குவித்த பின் வியாபாரத்திற்கு தடை விதித்த பொழுது ‘’ பொருளாதார ஞானம்’’ ஏன் பிரதமர் மண்டையில் உதிக்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது.

பிரதமர் கடந்த ஆகஸ்டில் பதவி ஏற்கும் போது உறுதியளித்த மலேசிய குடும்பம்” எங்கே போனது? நாட்டில் தினசரி கோவிட் 19 தொற்று 20 ஆயிரத்தை எட்டியுள்ள இவ்வேளையில் ரமலான் சந்தைக்கு குரல் கொடுக்கும் பிரதமர், தைப்பூச சந்தை குறித்து ஏன் வாய் திறக்க வில்லை, மலேசிய குடும்பம் எங்கே ஓடி ஒளிந்து கொண்டது என்று காட்டமாக கேட்டார்  கெஅடிலான் இளைஞர் பகுதி தேசிய உதவி தலைவர் ஜஸ்டின் ராஜ்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் கபடதாரிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் அடையாளம் காண மலேசிய இந்தியர்கள் தவறக்கூடாது.  65 ஆண்டுகள் நல்லவர் வேஷமிட்டு அம்னோ இந்தியர்களை கழுத்தறுத்து விட்டதை மறைத்து நீண்ட நாட்களாக சுய வாழ்வுக்காக ஒரு கூட்டம் அம்னோவை தாங்கிக்கொண்டு இருப்பதை நாம் அறிவோம், அதனால் அம்னோவுடன் அந்த துரோகிகளும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்பதனை நாம் மறந்தால் அது, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீயில் இட்டு பொசுக்குவதற்கு ஒப்பாகும் என்றார் சுபாங் ஜெயா மாநகராட்சி உறுப்பினரும்  கெஅடிலான் இளைஞர் பகுதி தேசிய உதவி தலைவருமான ஜஸ்டின் ராஜ்.

 

 

 


Pengarang :