ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிறந்த வேலை கலாசாரத்தை நிலை நிறுத்துவீர்- எம்.பி.கே.எல். பணியாளர்களுக்கு கோரிக்கை

கோல லங்காட், பிப் 17- மக்களின் நலனுக்காக கடமையாற்றும் போது சிறப்பான வேலை கலாசாரத்தை நிலைநிறுத்தும்படி கோல லங்காட் நகராண்மைக் கழக பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வெற்றியை அடைவதற்கு ஏதுவாக சுய நலத்தையும் கர்வத்தையும் ஒதுக்கி வைப்பது பொதுச் சேவை ஊழியர்களின் குண நலன்களாக இருத்தல் அவசியம் என்று நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.

சேவையின் தரத்தை உயர்த்துவதன் வழி பொதுச் சேவைத் துறையில் உயர்நெறி மற்றும் நிர்வாகம்  மீது பொதுமக்கள்  மத்தியில் காணப்படும் எதிர்மறையான கண்ணோட்டத்தை களைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கொள்கைப் பிடிப்புகளைக் கொண்டு கோல லங்காட் நகராண்மைக் கழகம்  முழுஈடுபாட்டுடன் பணியாற்றியதன் பலனை இன்றைய நிகழ்வில் காண்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள மாஸா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த பணியாளர் விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறப்பான சேவையை வழங்கிய 35 பேரும் பணியில் 25 ஆண்டுகள் நிறைவடையும் ஓய்வு பெற்ற எண்மரும் இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.


Pengarang :