ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஆசியானில் வலுவான முதலீட்டு மையமாக தடம் பதிக்க சிலாங்கூர் இலக்கு-டத்தோ தெங்

ஷா ஆலம், பிப். 18 – ஆசியான் பிராந்தியத்திலும் உலகளாவிய சந்தைகளிலும் வலுவான தடத்தைப் பதிக்கும் அதே வேளையில்  இந்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள  முதலீட்டாளர்களின் தேர்வுக்குரிய மையமாக சிலாங்கூர் விளங்குவதை உறுதி செய்யும் கடப்பாட்டையும் மாநில அரசு கொண்டுள்ளது என்று  டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

விண்வெளி மற்றும் உயிரியல் தொழில்நுட்பத் தொழில்துறை ஆகியவை சிலாங்கூர் அரசு முன்னரிமை வழங்கும் முதன்மை துறைகளாக விளங்குவதாக முதலீடு மற்றும் வர்த்தக தொழில்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஐ-சிட்டி நகரை இந்த அளவுக்கு வடிவமைக்க உதவிய  ஐ-பெர்ஹாட் குழுமத்தின் தலைவர் டான் ஸ்ரீ லிம் கிம் ஹாங் போன்ற  போன்ற தொழில்துறை மற்றும் தொலைநோக்குப் பார்வையாளர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எப்போதும் ஆர்வமாக உள்ளோம்.  ஐ-சிட்டியுடன் இணைந்து சிலாங்கூரில் ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.  சிலாங்கூர்  மாநிலத்தை இப்பிராந்தியத்தின்  விவேக  மாநிலமாக மாற்றும்  ஸ்மார்ட் சிலாங்கூர் வியூகத்தின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரை  இப்பிராந்தியத்தின் விவேக மாநிலமாக மேம்படுத்துவதற்காக மாநில அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் டத்தோ தெங் சொன்னார்.

பசுமை தொழில்நுட்ப வளர்ச்சியில் நாங்கள்  ஈடுபாடு காட்டி வருகிறோம். மலேசியாவில் பசுமைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்ற முடியும் என்று  நம்புகிறோம்.  இந்நோக்கத்திற்காக ஐ-சிட்டியுன் அணுக்கமான ஒத்துழைப்பை நல்கவும விரும்புகிறோம். ஐ-சிட்டியின் பல்லாண்டு கால அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பின் வாயிலாக பயன்மிக்க வகையிலான ஒத்துழைப்பை பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :