ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தனிமைப்படுத்தும் நடைமுறையை ரத்து செய்வது தொடர்ந்து அடுத்த வரம் அறிவிக்கப்படும் – அமைச்சர்

புத்ராஜெயா,பிப் 18: கோவிட்-19 நெருங்கிய தொடர்பு தனிமைப்படுத்தல் நெறிமுறை குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கைரி கூறினார். இது MOH இன் கீழ் சுகாதாரப் பணியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட நெறிமுறைக்கு இணங்க,நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

ஆனால் குறிப்பிட்ட நாட்களில் கோவிட் -19 சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். கடந்த செவ்வாய்கிழமை (பிப்ரவரி 15) MOH சுகாதார ஊழியர்களுக்கு சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு சுற்றறிக்கை வெளியிட்டதாக கைரி கூறினார்.

எந்த அறிகுறிகளும் இல்லாத நெருக்கமான தொடர்பு​​டையவர்களை தனிமைப்படுத்துதலால் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மேலாண்மை மற்றும் பலவற்றிற்கு இடையூறு ஏற்படுவது என்று அவர் கூறினார். இதற்கிடையில், நாளை முதல், தினசரி கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை பிற்பகலில் அறிவிக்கப்படாது, மறுநாள் காலை 10 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை மற்றும் பல விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கைரி கூறினார்.


Pengarang :