ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சுகாதார அமைச்சு அனுமதித்தால் சிறார் தடுப்பூசித் திட்டத்தை அமல்படுத்தத் தயார்- மந்திரி புசார்

கோம்பாக், பிப் 19- சுகாதார அமைச்சு அனுமதித்தால் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தற்போதைக்கு செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் ஊக்கத் தடுப்பூசியை செலுத்துவதற்கு மட்டுமே தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சின் அனுமதிக்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. அவர்கள் அனுமதித்தால் அத்திட்டத்தை நாம் அமல்படுத்துவோம். தற்போதைக்கு ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இன்று இங்குள்ள பத்துகேவ்ஸ் டேவான் கம்போங் மிலாயுவில் மின்- விளையாட்டு நிர்வாகப் பட்டறையை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்திற்கு 150,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை 80,000 பேர் அத்திட்டத்தின் கீழ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.

பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 383,165 சிறார்கள் அல்லது 10.8 விழுக்காட்டினர் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.


Pengarang :