ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தொற்று பரவுகிறது ஆனால் அதிதீவிரத் தாக்கம் இன்னும் குறைவாக உள்ளது

ஷா ஆலம், பிப் 20: கோவிட் -19 நோய்த்தொற்று நேற்றை விட 1,000 அதிகமாகி 28,825 ஆக உயர்ந்துள்ளது, ஆனால் அதிதீவிரத் தாக்கம் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

அறிகுறிகள் இல்லாத அல்லது சிறிய அறிகுறியுடன் முதலாம், இரண்டாம் நிலையில் 28,730 பேர் அல்லது 99.67 விழுக்காட்டைச் சேர்ந்தவையாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று பதிவான 28,825 தினசரி தொற்றுகளில், 95 பேர் அல்லது 0.33 விழுக்காட்டினர் அதிதீவிர தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்கள்” என்று அவர் இன்று காலை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பெரும்பாலான நோயாளிகள் 2 ஆம் கட்டத்தில் உள்ளனர்,கட்டம் வரையிலான பாதிப்பை எதிர்நோக்கியவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

1 ஆம் கட்டம்: 8,412 தொற்றுகள் (29.18%)
2 ஆம் கட்டம்: 20,318 தொற்றுகள் (70.49 %)
3 ஆம் கட்டம்: 59 தொற்றுகள் (0.20 %)
4 ஆம் கட்டம்: 22 தொற்றுகள் (0.08 %)
5 ஆம் கட்டம்: 14 தொற்றுகள் (0.05 %)

டாக்டர் நூர் ஹிஷாம் கூறுகையில், மொத்தம் 28 பேர் அல்லது 29.47 விழுக்காட்டினர் தடுப்பூசி போடவில்லை, 49 பேர் (51.58 விழுக்காடு) இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்கள்.

அதே பிரிவில் 18 பேர் (18.95 விழுக்காடு) ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும், 41 பேர் (43.16 விழுக்காடு) 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 48 பேர் (50.53 விழுக்காடு) ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் கொண்டிருந்தனர்.

“ஒன்பது சம்பவங்கள் (மொத்தம் 28,825 சம்பவங்களில்) இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் மருத்துவமனைக்கு வெளியே நான்கு இறப்புகள் அடங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :