ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 : ஊக்கத் தடுப்பூசி பெறாதவர்கள் மத்தியில் அதிக மரணங்கள்- அமைச்சர் கைரி

கோலாலம்பூர், பிப் 21- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி உள்பட கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசியைப் பெறாதவர்கள் மத்தியில் மரண எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து காணப்படுகிறது.

ஜனவரி மாதம் முதல் நேற்று வரையிலான தடுப்பூசி நிலவரப்படி ஒரு லட்சம் பேருக்கு எத்தனை உயிரிழப்புகள் என்பது மீதான தரவுகளை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

அதில் 40 முதல் 49 வயது வரையிலான தடுப்பூசி பெறாத நோயாளிகளின் மரண விகிதம் 100,000 பேருக்கு 92.09 விழுக்காடாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்பது வயதுக்கும் மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்களின் மத்தியில் மரண எண்ணிக்கை 167.06 ஆகவும்  தடுப்பூசி பெற்றவர்கள் மத்தியில் 119.34 ஆகவும் ஊக்கத்தடுப்பூசி பெற்றவர்கள் மத்தியில் 42.00 ஆகவும் உள்ளன.

அதே சமயம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 முதல் 29 வயது வரையிலானவர்களிடையே மரண எண்ணிக்கை 8.14 விழுக்காடாகவும் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் மத்தியில் 0.98 விழுக்காடாகவும ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் மத்தியில் 0 விழுக்காடாகவும் உள்ளன.

மேலும், தடுப்பூசி பெறாத 30 முதல் 39 வயது வரையிலானவர்களைப் பொறுத்த வரை ஒரு லட்சம் பேரில் 14 பேருக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களிடையே இந்த எண்ணிக்கை 1.90 ஆகவும் ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் மத்தியில் 4.18 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஐம்பது முதல் 59 வயது வரையிலானவர்கள் மத்தியில் தடுப்பூசி பெறாதவர்களின் மரண எண்ணிக்கை 49.46 விழுக்காடாகவும் தடுப்பூசி பெற்றவர்களிடையே 6.62 விழுக்காடாகவும் ஊக்கத தடுப்பூ பெற்றவர்கள் மத்தியில் 4.41 விழுக்காடாகவும் உள்ளது.


Pengarang :