ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் தினத்தில் 3,000 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்

மெர்சிங், பிப் 21- வரும் சனிக்கிழமை நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸ்காரர்களும் அதிகாரிகளும் ஈடுபடுவர்.

பிரசார காலத்தின் போது தேவையின் அடிப்படையில் காவல் துறை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஸமான் மாமாட் கூறினார்.

தேர்தலின் போது பொது ஒழுங்கு தொடர்ந்து நிலை நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அனைத்து தரப்பினரும் போலீசார் வழங்கக்கூடிய ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று, இங்குள்ள தஞ்சோங் லெமானில் தெங்காரோ பெல்டா குடியேற்றவாசிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜோகூர் மாநிலத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடக்கக்கட்ட வாக்களிப்பு மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும்.

இதனிடையே, மெர்சிங், தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பெல்டா தெங்காரோ வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் தாப்பிஸ் நடவடிக்கையில் போதைப் பொருளை தவறாகப் பயன்படுத்திய குற்றத்தின் பேரில் 58 பேர் கைது செய்யப்பட்டதாகவும் டத்தோ கமாருள் ஸமான் கூறினார்.


Pengarang :