ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

சிலாங்கூரில்  கல்வி மேம்பாட்டுக்கு மூன்று சக்திவாய்ந்த திட்டங்களை மாநிலரசு செயல்படுத்தி வருகிறது.

ஷா ஆலம், பிப் 23: சிலாங்கூர் மாநில அரசு குறிப்பாக சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கு பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த முயற்சியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) புதிய மாணவர்களுக்கு இல்திசம் மஹாசிஸ்வா என்ற பள்ளி உயர்நிலை கல்விக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு RM1,000 உதவியும் அடங்கும்.

சிலாங்கூர் உதவித்தொகை நிதி மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்படிப்புகளுக்கு மாறக்கூடிய கடன்கள் மற்றும் ஒரு வருடத்திற்கான இலவச இணையத்துடன் கூடிய சிம் கார்டுகளும் வழங்கப்படுகிறது.

“சிலாங்கூர் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதோடு, அனைத்துச் சமூகத்தினருக்கும் கல்வி நிகழ்ச்சி நிரலுக்கு முன்னுரிமை அளிக்கிறது” என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று ட்விட்டரில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சிலாங்கூர் 2022 பட்ஜெட்டில் RM234 கோடி ரிங்கிட் மற்றும் RM1.12 கோடி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது.

மாணவர்கள், பெண்கள், B40, மாற்றுத்திறனாளிகள், தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகள் உட்பட அனைத்துக் குழுக்களுக்கும் பட்ஜெட் நன்மை பயக்கும், சுகாதாரம், கல்வி, தொழில், வணிகம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது.


Pengarang :