ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இயங்கலை வாயிலாக கெஅடிலான் கட்சித் தேர்தல்- “அடில்“ செயலியை அறிமுகப்படுத்தினார் அன்வார்

ஷா ஆலம், மார்ச் 5- வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சியின் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தலின் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக “அடில்“ (நீதி) எனும் செயலியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கட்சி ரீதியாக தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இலக்கவியலைப் பயன்படுத்தும் முதல் கட்சியாக கெஅடிலான் விளங்குகிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவருமான அவர் சொன்னார்.

பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கெஅடிலானை வலுப்படுத்துவதற்கு கட்சி நிலையிலான தேர்தல் மிக முக்கியமானதாக  விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உறுப்பினர்களுக்கே உள்ளதால் இந்த தேர்தல் நடைமுறையை ஒத்தி வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செயலியின் பயன்பாடு குறித்து கட்சியின் தேர்தல் குழு உறுப்பினர்களுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். தேர்தல் சீராகவும் வெளிப்படையாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் நடைபெறுவதற்கு ஏதுவாக அந்த செயலி குறித்த தெளிவான புரிதல் உறுப்பினர்களுக்கு இருப்பது அவசியம் என்று அவர் சொன்னார்.

வரும் ஏப்ரல் மாதம் 22 முதல் 29 வரை நடைபெறுவதாக இருந்த 2023-2025 தவணைக்கான பொறுப்பாளர்கள் தேர்வு வரும் மே 13 முதல் மே 18 வரையிலான காலக்கட்டத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக கெஅடிலான் கட்சி முன்னதாக கூறியிருந்து.


Pengarang :