ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அதிகப்பட்ச உயர்வைப் பதிவு செய்தது கோவிட்.-19 நோய்த் தொற்று- நேற்று 33,209 பேர் பாதிப்பு

ஷா ஆலம், மார்ச் 4- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 33,209 ஆக அபரிமித உயர்வு கண்டது. நேற்று முன்தினம் மிக அதிகமாக 32,467  சம்பவங்கள் பதிவான.

தாக்கம் அதிகம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 203 ஆகப் பதிவாகியுள்ளது. நோய்க்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் கட்ட பாதிப்பை 12,935 பேரும் லேசான அறிகுறி கொண்டா இரண்டாம் கட்ட பாதிப்பை 20,071 பேரும் கொண்டுள்ளனர்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 203 நோயாளிகளில் 43 பேர் அல்லது 21.18 விழுக்காட்டினர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள் ஆவர். மேலும் 117 பேர் அல்லது 57.64 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கின்றனர். 43 பேர் அல்லது 21.18 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இது தவிர, கடும் பாதிப்புக்குள்ளான நோயாளிகளில் 119 பேர் அல்லது 58.62 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ள வேளையில் 67 பேர் அல்லது 33 விழுக்காட்டினர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பாதிப்புக்குள்ளானவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் அடங்குவார்.

பிரிவு வாரியாக கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 12,935 சம்பவங்கள் (39.95 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 20,071 சம்பவங்கள் (60.44 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 98 சம்பவங்கள் (0.26 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 52 சம்பவங்கள் (0.15 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 53 சம்பவங்கள் (0.16 விழுக்காடு)

இந்த புதிய நோய்த் தொற்றுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்க்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 61 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.


Pengarang :