ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தொழில்முனைவோர் பயிற்சியில் 800 பேர் பங்கேற்பு- ரோட்சியா தகவல்

ஷா ஆலம், மார்ச் 5 – வணிகத்தை நிர்வகிப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக 800க்கும் மேற்பட்டோர் சிலாங்கூர் தொழில்முனைவோர் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றுள்ளனர் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

வர்த்தகத்தில் ஈடுபடும் போது  ஏற்படக்கூடிய நிதிச் சிக்கல்களை எதிர்கொள்தற்கான வழிமுறைகள் தவிர்த்து, அத்துறை  சார்ந்த அறிவாற்றலை  நிபுணர்களிடம்  ஆலோசனை பெறும் நோக்கில் அவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

திட்டங்களில் சேருவோரின் தேவைகளை நாங்கள் பார்க்கிறோம். வணிகத்தில் போட்டித்தன்மையை அதிகரிக்க அவர்களுக்கு ஏதேனும் உதவி அல்லது பொருட்கள் அல்லது உபகரணங்கள் தேவைப்பட்டால் அதனை  நாங்கள் வழங்குவோம் என்று அவர் சொன்னார்.

தங்கள் தொழிலைத் தொடங்க போதுமான அளவு நிதி இல்லை என்றால், ஹிஜ்ரா (யாயாசன் ஹிஜ்ரா)  அறவாரியம் மூலம் கடன் வழங்க முடியும். அவர்கள் வர்த்தகத்தில் சிக்கலை எதிர்நோக்கினால் தொழில்முனைவோர் கிளினிக் மூலம் நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டுகிறோம் என்றார் அவர்.

நேற்று ஷா ஆலம் மாநாட்டு மையத்தில்  சிலாங்கூர் அனைத்துலக  ஹலால் மாநாட்டில் (செல்ஹாக்) செய்தியாளர்களைச் சந்தித்த போது  அவர் இதனைக் கூறினார்.


Pengarang :