ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்- சமூக ஊடகங்களில் படங்கள், காணொளிகள் பகிர்வு

ஷா ஆலம், மார்ச் 7- இன்று மாலை பெய்த அடை மழை காரணமாகக் கோலாலம்பூரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாலான் கூச்சாய் லாமாவும் ஒன்று என அறியப்படுகிறது.

வலை தளவாசிகள் வெள்ளம் சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்ந்து கொண்டதோடு அது குறித்த கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் வெளியான வெள்ளம் தொடர்பான படங்கள் உண்மையானவை என்பதைத் தளவாசிகள் கோலாலம்பூர் தீயணைப்புத் துறையின் பேச்சாளர்  மாலை 4.15 மணியளவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறினார்.

இதனிடையே, கிள்ளான் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதைப் புதிய பந்தாய்ப் பாரு நெடுஞ்சாலை (என்.பி.இ.), கெசாஸ் நெடுஞ்சாலை நிறுவனங்களும் மலேசிய நெடுஞ்சாலை வாரியமும் உறுதிப்படுத்தின.

வெள்ளம் காரணமாகக் கூச்சாய் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாக என்.பி.இ. கூறியது. நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதைக் கெசாஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.


Pengarang :