ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளம்- தாமான் மேடானில் 300 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

ஷா ஆலம், மார்ச் 8– திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் மேடான் தொகுதியைச் சேர்ந்த 300 பேர் நேற்றிரவு இரு துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பிஜேஎஸ் 1, பிஜேஎஸ் 2சி மற்றும் பிஜேஎஸ் 3 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ஷியாம்சுல் பிர்டாவுஸ் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம். வழக்கமாக தாமான் மேடான் பகுதியில் வெள்ள நீர் வெகு விரைவாக வடிந்து விடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழுமையான எண்ணிக்கை கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.

டேவான் பிஜேஎஸ் 2சி/6 மற்றும் டேவான் பிஜேஎஸ் 1/35 ஆகிய இரு மண்டபங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டைத் தமது தரப்பு உடனடியாக மேற்கொண்டதாகச் சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ள 300 பேருக்கும் உணவு சமைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று மாலை 3.00 மணி தொடங்கிப் பெய்த அடை மழை காரணமாகச் சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :