ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆள் பற்றாக்குறையால் தோட்டத் துறை RM2 கோடி இழப்பைச் சந்திக்கிறது – சரவணன்

கோலாலம்பூர், மார்ச் 8 – கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் ஆள் பற்றாக்குறையால் தோட்டத் துறை கடந்த ஆண்டு RM2 கோடி வரை இழப்பைச் சந்தித்துள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கும் எண்ணெய் பனை தோட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாகும் என்றார்.

எனவே, துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இம்மாத இறுதியில் வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வருவதற்கான பதிவை அமைச்சு திறந்து வைத்து மற்றும் ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்து வருகிறது என்றார்.

“கிட்டத்தட்ட ஒரு வருடமாக நாங்கள் தேடியும் வாய்ப்பு வழங்கினாலும்  உள்ளூர் குடிமக்கள் ஆர்வம் காட்டவில்லை,” என்று ஜெம்போல் எம்பி டத்தோஸ்ரீ ஹாஜி சலீம் ஷெரீப் இன்று டேவான் ராக்யாட்டில் நடைப்பெற்ற கேள்வி பதில் அங்கத்தில் சரவணன் கூறினார்.

விரைவான தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, பயிற்சி மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு திட்டங்களை அரசாங்கம் வலியுறுத்தியது என்றார்.

இது மிகவும் திறமையான உள்ளூர் பணியாளர்களை உருவாக்குவதுடன், தொழில்துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் சரவணன் கூறினார்.

“2022 பட்ஜெட்டில், இந்த ஆண்டு 600,000 வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வேலையின்மை விகிதத்தைக் குறைக்கும் இலக்கை ஆதரிக்கும் வகையில், ‘கெலுவர்கா மலேசியா, மக்மூர் செஜாத்ரா’ என்ற கருப்பொருளான மலேசியக் குடும்ப வேலை உறுதி முன்முயற்சிக்கு RM480 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். சுங்கை சிப்புட் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் இன்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

பயிற்சி மற்றும் மேம்பாடு குறித்த மலேசிய அரசாங்கத்தின் புதிய தொலைநோக்கு பார்வை , கொள்கை மற்றும் காலக்கெடுவிற்குள் முயற்சியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கேசவன் அறிய விரும்பினார்.


Pengarang :