ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

தாமான் புவானாவில் வடிகால் துப்புரவுப் பணிகளைக் கே.டி.இ.பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மேற்கொண்டது.

ஷா ஆலம், மார்ச் 9- பெட்டாலிங் ஜெயா, தாமான் புவானா மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வடிகால்களைத் துப்புரவு செய்வது, சாலைகளைச் சுத்தம் செய்வது மற்றும் குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளைத் தமது தரப்பு மேற்கொண்டு வருவதாகக் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கூறியது.

இந்த துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றமும் தங்களுக்கு உதவி புரிந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

வெள்ளம் காரணமாக வடிகால்கள் மற்றும் சாலைகளில் குவிந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவது மற்றும் குடியிருப்பாளர்கள் வீசிய .குப்பைகளை அகற்றுவது ஆகிய பணிகளில் கவனம் செலுத்தப்பட்டதாக அந்நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

நேற்று முன்தினம் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,225 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டன.


Pengarang :