ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சிலாங்கூரில் வெள்ள  நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது

ஷா ஆலம், மார்ச் 9– மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியதோடு நிலைமையும் கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் அபரிமித உயர்வைக் காணவில்லை என்று அத்துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உலு லங்காட், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் நீர் வடிந்து வருவதோடு தற்காலிக நிவாரண மையங்களில் புதிதாக யாரும் அடைக்கலம் நாடவில்லை என்று அவர் சொன்னார்.

எனினும், கனத்த மழையின் எதிரொலியாக ஆற்றில் நீர் பெருக்கெடுத்த காரணத்தால் புக்கிட் சங்காங் பகுதியில் நேற்று மாலை தடுப்பணையில் மண் அரிப்பு ஏற்பட்டதாக கூறிய அவர், அந்த மண் அரிப்பை சரி செய்யும் பணியில் மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் நான்கு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதோடு தீவிரக் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.


Pengarang :