ALAM SEKITAR & CUACAECONOMY

சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டினார்- லாரி உரிமையாளருக்கு வெ. 1,000 அபராதம்

ஷா ஆலம், மார்ச், 9-  செரெண்டா சீனப்பள்ளி அருகே குப்பைகளைச் சட்டவிரோதமாகக் கொட்டிய குற்றத்திற்காக லாரி உரிமையாளர் ஒருவருக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 1,000 வெள்ளி அபராதம் விதித்தது.

லாரியின் பதிவு எண் மற்றும் படத்தைப் பொது மக்கள் வழங்கியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.

அந்த லாரி நிறுவனம் ஒன்றின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிக்கு அருகில் உணவுக் கழிவுகளை அதன் உரிமையாளர்  கொட்டியுள்ளது தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

பொது மக்கள் சுகாதாரத்தைப் பேணி காக்கும் அதேவேளையில் சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டப்படுவது குறித்துத் தகவல் தந்து உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

புகார் அல்லது தகவல் தெரிவிக்க விரும்பும் பொது மக்கள் SISPAA இணையத் தளத்தில் https://selangor.spab.gov.my/ என்ற அகப்பக்கம் வாயிலாகத்  தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்:  03-6064 1331.


Pengarang :