ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இணைய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக RM6,000 அபராதம் விதிக்கப் பட்டது

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 10 – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் ஆபாசமான செய்தியை அனுப்பியதன் மூலம் நெட்வொர்க் வசதிகளைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் RM6,000 அபராதம் விதித்தது.

நீதிபதி ஜமாலுடின் மாட், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் முகமது ரஸ்மான் ரம்லி, 32, என்பவருக்கு, மூன்று மாதச் சிறை தண்டனை விதித்தார். குற்றத்தை ஒப்புக்கொண்டவர் அபராததை செலுத்தினர்.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 20, அன்று மதியம் 2.49 மணிக்கு இங்குள்ள ஆரா டாமன்சாராவில் உள்ள ஒரு வீட்டில் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் நோக்கத்துடன், வாட்ஸ்ஆப் மூலம் அந்தச் செய்தியின் உள் அடக்கத்தை அறிந்தே அவதூறான தகவல்தொடர்புகளை அனுப்பியதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 (1)(a) இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் மற்றும் தினசரிக் குற்றத்திற்கு RM1,000 அபராதம் ஆகியவற்றை வழங்க வகை செய்கிறது.

இதற்கிடையில், வழக்கின் போது, ​​பிரதிநிதித்துவப் படுத்தப்படாத முகமது ரஸ்மான், இரண்டு குழந்தைகளுடன் தனித்து வாழும் தந்தை மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயை ஆதரிப்பதாகக் கூறினார். மேலும் தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்றும் உறுதியளித்தார்.

மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் வழக்குரைஞர் நூர் நஜிலா முகமது ஹாஷிம் வழக்கு தொடர்ந்தார்.


Pengarang :