ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

44 உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டதால்,  மாநிலப் பொருளாதாரம் பாதிக்கவில்லை

ஷா ஆலம், மார்ச் 17: கோவிட்-19 காரணமாக மாநிலத்தில் 44 உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகள் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டது சிலாங்கூரின் நிதி அல்லது பொருளாதாரத்தைப் பாதிக்கவில்லை.

ஏனென்றால், அந் நிறுவனங்கள் வழி பெற்ற நில மற்றும் மதிப்பீட்டு  வரி என்பது சொற்பமே. என்று தொழில்துறை ஆட்சிக்குழு டத்தோ ‘தெங் சாங் கிம் விளக்கினார்.

“இந்த மூடும் நடவடிக்கை மாநிலத்தில் நிதி பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஆனால் மொத்தம் 835 உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் 119 வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்” என்று இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.

சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், வேலை இழந்தவர்களுக்குக் கடந்த ஆண்டு கேரியர் கார்னிவல் – சிலாங்கூர் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

” கோவிட்-19 தொற்றுநோயால் பல தொழிற்துறைகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக தேவையை  ஊக்கமளிக்கும் அளவு நிறைவு செய்ய கேரியர் கார்னிவல் – சிலாங்கூர் வேலை வாய்ப்பு திட்டங்கள் ” உதவின என்று தெங் சாங் கிம் விளக்கினார்.


Pengarang :