ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிளாஸ்டிக் கழிவுகளை வழங்கக் கேடிஇபி கழிவு மேலாண்மை மற்றும் பெட்ரோனாஸ் கெமிக்கல் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஷா ஆலம், மார்ச் 17 – மலேசியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குவதற்கும், கழிவுப் பிரிப்பு வசதிகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கும், பெட்ரோனாஸ் கெமிக்கல் குரூப் பெர்ஹாட் (PCG) உடன் கேடிஇபி கழிவு மேலாண்மை எஸ்டிஎன் பிஎச்டி (KDEBWM) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

கேடிஇபி கழிவு மேலாண்மை நிர்வாக இயக்குனர் ரம்லி முகமது தாஹிர் மற்றும் பெட்ரோனாஸ் கெமிக்கல் குரூப் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகமது யூஸ்ரி முகமது யூசோப் ஆகியோருக்கு இடையே நேற்று நடந்த மெய்நிகர் விழாவில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், கேடிஇபி கழிவு மேலாண்மை, உணவு, சுகாதாரம், வீட்டு மற்றும் தொழில்துறை பேக்கேஜிங் ஆகியவற்றிற்கான தயாரிப்புகளைப் பெட்ரோனாஸ் கெமிக்கல் குரூப்க்குப் பாலிஎதிலீன் (PE), பாலிப்ரோப்பிலீன் (PP) மற்றும் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) ஆகியவற்றை உள்ளடக்கிய பிளாஸ்டிக் கழிவுகளை வழங்கும்.

பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான பங்களிப்பை வழங்கும் கூட்டாண்மை அல்லது ஒத்துழைப்புக்குக் கேடிஇபி கழிவு மேலாண்மை எப்போதும் தயாராக இருக்கும் என்று ரம்லி கூறினார்.

“இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மலேசியாவில் பிளாஸ்டிக் கழிவு பிரிப்பினை உறுதி செய்யும் அதற்கான வசதிகளை உருவாக்கவும் மேம்படுத்துவதற்குமான வணிகச் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான கூட்டு ஆய்வையும் உள்ளடக்கியது” என்று அவர் கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொருள் மீட்பு மையங்களை நிறுவுதல் உள்ளிட்ட திடக்கழிவு தொடர்பான வணிக வாய்ப்புகளை ஆராயும் கேடிஇபி கழிவு மேலாண்மையின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.

 


Pengarang :