ECONOMYNATIONALSELANGOR

பக்கத்தான் ஹராப்பான் மாநிலங்களில் இவ்வாண்டு சட்டமன்றம் கலைக்கப்படாது

ஷா ஆலம், மார்ச் 18– பகாகத்தான் ஹராப்பான் வசமுள்ள சிலாங்கூர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இவ்வாண்டு சட்டமன்றம் கலைக்கப்படாது.

கோவிட்-19 மற்றும் வெள்ளத்தால்  ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் மீட்சிபெறுவதை  உறுதி செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காக
இம்முடிவு எடுக்கப்பட்டதாக பக்கத்தான் ஹராப்பான் தலைவர் மன்றம் கூறியது.

பெரு வெள்ளம் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றினால் பொருளாதார ரீதியாக பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வருமான இழப்பு, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு ஆகிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு தேர்தலை உடனடியாக நடத்துவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது அது தெரிவித்து.

நமது ஒட்டுமொத்த முயற்சியும் மக்களைக் காப்பாற்றுவதையும் பொருளாதாரத்தை மீட்சிபெறச் செய்வதையும் இலக்காக கொண்டிருக்க வேண்டும் என்று அம்மன்றம்  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாக அதாவது அடுத்த  மாதங்களில் தேர்தலை நடத்த சில தரப்பினர் வலியுறுத்தி வருவது தொடர்பில் பக்கத்தான் தலைவர் மன்றம் இவ்வாறு கருத்துரைத்து.

நாட்டில் திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதனைப் பின்பற்றி தேர்தலை நடத்த சிலாங்கூர் திட்டமிடவில்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

மலாக்கா மற்றும் ஜோகூர் தேர்தல்களில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டின் பொதுத் தேர்தலும் ஓரிரு மாதங்களில் நடத்தப்படவேண்டும் என்று அம்னோ தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.


Pengarang :