ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிளாட்ஸ் இணைய வர்த்தகத் திட்டத்தில் 8,000 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், மார்ச் 19 – பிளாட்ஸ் எனப்படும் சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் திட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுமார் 7,742 வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இணைய வர்த்தகத்தில் பங்கேற்க வர்த்தகர்களை ஊக்குவிப்பதற்காக  நியமிக்கப்பட்ட ராக்கான் டிஜிட்டல் சிலாங்கூர் குழுவின் முயற்சியால் இந்த வளர்ச்சி காணப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

ரமலான் மாதத்தில் மட்டுமின்றி அதன் செயலாக்க காலம் முழுவதும் வர்த்தகர்களுக்கு  உதவக்கூடிய  ஒரு விளம்பர தளம் மற்றும் இலக்வியல் வழிகாட்டியாக விளங்கும் நோக்கில் இந்த பிளாட்ஸ் தளம் உருவாக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  குறிப்பாக சிலாங்கூரில் உள்ள வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அமிருடின் சொன்னார்.

இந்த இலக்கவியல் முயற்சி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக விளங்குகிறது. மேலும் வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை தொடர்வதற்கும்  அவர்களின் விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும் கூடுதலாக இந்த தளத்தை நாங்கள் தயார் செய்கிறோம் என்றார் அவர்.


Pengarang :