ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

தொழில்துறை கழிவுகளை அகற்றும் பணிக்கு கே.டி இ பி. வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சேவையை பயன்படுத்த வேண்டும்

ஷா ஆலம், மார்ச் 21–  அட்டவணையிடப்படாத கழிவுகளை அகற்றும் பணிக்கு கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தும்படி தொழிற்சாலைகள் மற்றும் தொழில் துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் அந்த கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்யும் அதேவேளையில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளைக் கொட்டும் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சட்டவிரோத குப்பைக் கொட்டும் மையங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள கே.டி. இ.பி  வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் துணை குத்தகையாளரை நியமித்துள்ளது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வசதியை அவர்கள் கொண்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று தொழிற்சாலை கழிவுகளை அகற்றுவதற்கு துணைக் குத்தகையாளர்கள் நியமிக்கப்படுவது தொடர்பில் ஈஜோக் உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொழிலியல் கழிவுகளை அகற்றும் பணிக்கு அரசாங்க துணை நிறுவனம் நியமிக்கப்பட்டதானது தொழில துறையினரை தண்டிக்கும் நோக்கிலானது அல்ல எனக் கூறிய அவர், அத்தகைய கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.


Pengarang :