ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சமூகப் பிரச்னைகளைக் களைய இலவச ஆலோசனை சேவை- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 21-  சிலாங்கூரில் சமூகப் பிரச்னைகளைக் களையப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளின் வாயிலாகக்  கடந்த 2020 ஆம் ஆண்டில் 17,244 ஆக இருந்த சமூகப் பிரச்னைகளின் எண்ணிக்கை கடந்தாண்டு 14,725 ஆகக் குறைந்துள்ளது.

சிலாங்கூர் ஆலோசனை மையத்தின் வாயிலாக வழங்கப்பட்ட இலவச ஆலோசனை சேவையின் வாயிலாக  14 விழுக்காட்டு சம்பவங்கள் குறைந்துள்ளதாக  மனித மூலதனத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

பதிவு பெற்ற ஆலோசனை சேவையாளர்களைக் கொண்டு இங்குள்ள பி.கே.என் எஸ். காம்ப்ளெக்சில் வழங்கப்படும் இச்சேவை  மீட்சிக்கான மாற்று வழியாகவும் விளங்குகிறது என்றார் அவர்.

அதிகளவில் வேலை வாய்ப்பு நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் வேலையின்மை காரணமாக ஏற்படும் சமூகப் பிரச்னைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநிலச் சட்டமன்றத்தில் அவர் கூறினார்.

 


Pengarang :