ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு  வெ.700 கோடி ஒதுக்கீடு – இஷாம் ஹஷிம் தகவல்

சபாக் பெர்ணம், மார்ச் 28–  சிலாங்கூர் அரசு 700 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டின் மூலம் வெள்ளப் பிரச்னைக்கு நீண்டகால அடிப்படையில்  தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வரும் 2025 ஆம் ஆண்டில் வறட்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் நீர் மேலாண்மை திட்டங்களையும் இந்த ஒதுக்கீடு உள்ளடக்கியுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இத்திட்டம் விரிவான அளவில் மேற்கொள்ளப்படும். வெள்ளத்தைக் கையாளும் வியூகங்களை மட்டுமின்றி வறட்சியை எதிர் கொள்ளும் வகையில் ஏரிகள்,குளங்கள் மற்றும் சுரங்கங்களில் நீரை சேகரித்து வைக்கும் திட்டங்களையும் இது உள்ளடக்கியிருக்கும் என்றார் அவர்.

இதுதவிர, ஷா ஆலமில் 200 கோடி வெள்ளி செலவில் வெள்ள நீர் வடிகால் சுரங்கப்பாதையும் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

கிள்ளான் ஆற்றின் கோலாலம்பூர் வரையிலானப் பகுதியை 700 கோடி வெள்ளி செலவில் ஆழப்படுத்துவது,  கரைகள் மற்றும் வெள்ளத் தடுப்பணைகளை பலப்படுத்துவது ஆகியப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளை சரிக்காட் லண்டசான் லுமாயான்  சென். பெர்ஹாட் நிறுவனம் இன்னும் நான்கு மாதங்களில்  தொடங்கும் எனக்கூறிய அவர், ஈராண்டுகளில் அது முழுமைப் பெறும் என்றார்.


Pengarang :