ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பார்க்கிங் கிரெடிட்களை வாங்குவதை எளிதாக்கும் வகையில், கேகே சூப்பர் மார்ட் இ-கூப்பன் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டுள்ளது.

ஷா ஆலம், ஏப்ரல் 2: கேகே சூப்பர் மார்ட் அங்காடி, ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங்கிற்கான அதிகாரப்பூர்வ இ-கூப்பன் ஏஜெண்டாக (எஸ்எஸ்பி) நேற்று முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பம் இல்லாதவர்களுக்கு பார்க்கிங் கிரெடிட் வாங்க உதவுவதே இந்த ஏற்பாடு  என்று ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு  ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கருத்து தெரிவித்தார்.

நேற்று தொடங்கி, சிலாங்கூர் முழுவதும் பார்க்கிங் கட்டணம் செலுத்த டிஜிட்டல் செயலியைப் பயன்படுத்த படும் , இனி காகித கூப்பன்கள் இல்லை.

” எஸ்எஸ்பி விண்ணப்பம் இல்லாதவர்கள் இன்று முதல் கேகே சூப்பர் மார்ட் மற்றும் பிற இ-கூப்பன் முகவர்களிடம் பார்க்கிங் கிரெடிட் வாங்கலாம்,” என்று அவர் கூறினார், மேலும் நுகர்வோரின் வசதிக்காக அதிக முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 1 முதல், சிலாங்கூரில் உள்ள அனைத்து  ஊராட்சி மன்றங்களும்  கார் பார்க்கிங் கட்டணத்தை  டிஜிட்டல் முறைக்கு மாற்றியுள்ளது.  அதை கூகுள் பிளேஸ்டோர், ஏப்ஸ்டோர் அல்லது ஹூவாய் ஸ்டோர் ஆகிய தளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்.

மார்ச் 24 அன்று இங் ஸீ ஹான் காகித கூப்பன் வைத்திருப்பவர்கள், மார்ச் 26 முதல் கிரெடிட்டிற்கு கூப்பனின் மீதமுள்ள மதிப்பை மாற்ற, எஸ்எஸ்பி பயனர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த மாத இறுதியில் இருந்து மொத்தம் 29,391 காகித பார்க்கிங் கூப்பன்கள் ரிங்கிட் 17,942.20 மதிப்பில் மாற்றப்பட்டுள்ளன


Pengarang :