ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பேரரசர், பேரரசியார் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

கோலாலம்பூர், ஏப் 2- கோவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது  உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான்  அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா தம்பதியர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மாட்சிமை தங்கிய பேரரசர் இம்மாதம் 7 ஆம் தேதி வரையிலும் பேரரசியார் இம்மாதம் 8 ஆம் தேதி வரையிலும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வர் என்று இஸ்தானா நெகாரா அரச விவகாரங்களுக்கான அதிகாரி டத்தோ அகமது ஃபாடில் சம்சுடின் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான லேசான அறிகுறி கொண்டவர்கள் அல்லது அறிகுறியைக் கொண்டிராதவர்களுக்கு சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள சீராக செயலாக்க நடைமுறைக்கேற்ப (எஸ்.ஒ.பி.) அவ்விரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

பேரரசர் தம்பதியர் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டுள்ளனர் என்பதை  தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். பொதுவாக அவர்கள் நல்ல நிலையில் உள்ளதோடு கவலையளிக்கும் அவர்களின் உடல் நிலை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு நேற்று எண்டமிக் கட்டத்திற்கு மாறிய போதிலும் புனித ரமலான் மாதத்தில் பொதுமக்கள் மிகந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதோடு சுயக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளதாக டத்தோ ஃபாடில் சொன்னார்.

மாமன்னர் தம்பதியர் நோய்த் தொற்றிலிருந்து விரைவில் குணமடையவும் நீண்ட ஆயுளுடன் இருக்கவும் பிரார்த்திக்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

 


Pengarang :