ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ரமலான் பஜாரின் எஸ்ஓபியை மக்கள் கடைபிடிக்கிறார்கள்

சுபாங் ஜெயா, ஏப்ரல் 9: மாநிலம் முழுவதும் உள்ள ரமலான் பஜார்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு (எஸ்ஒபி) மக்கள் இணங்கிச் செயல் படுவது மீது டத்தோ மந்திரி புசார் திருப்தி அடைந்துள்ளார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இதுவரை சில இடங்களில் நெரிசல் இருப்பதாகப் புகார்கள் வந்தாலும், எஸ்ஒபி உடன் இணங்குவது இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், ஊராட்சி மன்றங்கள் (PBT) இடப் பொருத்தத்தைப் பார்க்க வேண்டும், அதனால்தான் கட்டுப்பாட்டை எளிதாக்குவதற்குத் திறந்தவெளிகள், வயல்வெளிகள் மற்றும் சதுரங்களில் பஜார்களை நடத்த ஊக்குவிக்கப்படுகிறது.

“ஊராட்சி மன்ற  அதிகாரிகள் பஜார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்கிறேன், இதனால் அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். வியாபாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், பார்வையாளர்களின் நெரிசலைக் குறைக்க முடியும்,” என்றார்.

பூச்சோங்கில் உள்ள பண்டார் கின்ராரா 5 ரமலான் பஜாரில் சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (பிளாட்ஸ்) 3.0-ஐ நடத்திய பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு, மாநில அரசு சிலாங்கூர் முழுவதும் ரமலான் பஜார் வணிகர்களுக்கு 11,967 மனைகளை வழங்கியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் பரவியுள்ள கோவிட்-19 மாறுபாடான ஒமிக்ரோனின் பரவலின் அளவைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட 12 ஊராட்சி மன்ற அதிகாரிகளால் அனைத்து வணிகத் தளங்களும் வழங்கப்பட்டன.

 


Pengarang :