ECONOMYHEALTHPBTSELANGOR

பாலக்கோங் தொகுதியில் 40 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை

 ஷா ஆலம், ஏப் 19 – பாலக்கோங் தொகுதியில் வரும் மே 22 ஆம் தேதி முதல் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பரிசோதனை இயக்கம் பலாக்கோங் பாரு, டேவான் ஓராங் ராமாயில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00  மணி வரை  நடைபெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி தெரிவித்தார்.

பி.கே.எம். எனப்படும் மலேசிய குடும்பத் திட்டத்தில் உதவித் பெறும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்கலாம் என்று அவர் சொன்னார்

குறைந்த வருமானம் கொண்ட  தரப்பினர் தங்கள்  உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த மருத்துவ சோதனை இயக்கத்தை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்  என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள தனிநபர்கள் அல்லது குடும்பங்கள் வரும் மே 2 ஆம் தேதிக்கு முன்னதாக  https://forms.gle/MANtNd7GZTguNMy87  எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேல் விபரங்களுக்கு 03-9075 0331 அல்லது 03-9076 0331 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :