ECONOMYPBTSELANGOR

ஏழைகளுக்கு உணவுப் பொருள் விநியோகம், குழாய் பழுதுபார்ப்பு- ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூகப் பணி

ஷா ஆலம், ஏப் 21- பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் கடந்தாண்டு குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு 1,334 உணவுப் பொட்டலங்களை விநியோகித்ததோடு 35 வீடுகளில் பழுதடைந்த குழாய்களையும் சரி செய்தது.

கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் புத்ரா ஜெயாவிலுள்ள குறைந்த வருமானம் பெறு பி40 தரப்பினரை இலக்காகக் கொண்டு அமல்படுத்தப்பட்டு வரும் “செசாமா மாரா“ எனும் ஒன்றாக முன்னோக்கிச் செல்வோம் எனும் திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

சமூகத்திற்கு அடிப்படை உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பான மேல் விபரங்களுக்கு https://www.airselangor.com/sesamamara/ எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம் என அது தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

இந்த உதவிகள் தவிர்த்து உதவி தேவைப்படும் ஆயர் சிலாங்கூர் நிறுவன ஊழியர்களுக்கு இலவச மடிக்கணினி, இலவச இணைய தரவு சேவை மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு பள்ளி உதவிப் பொருள் வழங்கப்படுவதாகவும் அது கூறியது.


Pengarang :