ECONOMYMEDIA STATEMENT

தலைமறைவாக இருக்கும் 80 ரோஹிங்கியா கைதிகளை தேடும் முயற்சியில் போலீஸ் தீவிரம்

அலோர்ஸ்டார், ஏப் 23– சுங்கை பாக்காப் குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவல் முகாமிலிருந்து கடந்த புதன் கிழமை தப்பியே ரோஹிங்கியா சட்டவிரோதக் குடியேறிகளில் இன்னும் தலைமறைவாக இருக்கும் 80 பேரை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தப்பியோடியவர்களில் 65 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் ஏழு சிறுமிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கெடா மாநில போலீஸ் தலைவர் வான் ஹசான் வான் அகமது கூறினார்.

இதுவரை 229 ஆண்கள், 89 பெண்கள், 69 சிறார்கள் மற்றும் 61 சிறுமிகள் உள்பட மொத்தம் 448 பேர் இதுவரை மறுபடியும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

சுங்கை பாக்காப் முகாமில் இன்னும் 15 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஆவணங்களைத் சரிபார்க்கும் பணி முற்றுப் பெற்றவுடன் அவர்கள் வேறு முகாம்களுக்கு மாற்றப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த புதன் கிழமை அதிகாலை அந்த முகாமிலிருந்து 528 கைதிகள் தப்பினர். வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல முயன்ற போது அவர்களில் அறுவர் வாகனங்களால் மோதுண்டு உயிரிழந்தனர்.


Pengarang :