ECONOMYMEDIA STATEMENT

ஜெலி-கிரீக் சாலையில் இன்று வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும்

ஜெலி, ஏப் 30- நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜெலி-கிரீக் சாலை வழியாக கிளந்தான் மாநிலத்திற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட 5 முதல் 10 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெடா, பெர்லிஸ், பினாங்கு, பேரா போன்ற வட மாநிலங்களில் பெருநாள் விடுமுறை இன்று தொடங்குவதால் இச்சாலையில் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக ஜெலி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது அரிபின் கூறினார்.

இந்த தடத்தில் நோன்புப் பெருநாளுக்கு ஒரு வாரம் முன்னதாகவும் ஒரு வாரத்திற்கு பின்னரும் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள பத்து மெலிந்தாங்கில் சாலைத் தடுப்பு சோதனை நடவடிக்கையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்லும் போது சாலை விதிகளை முறையாகக் கடைபிடித்து வாகனங்களைச் செலுத்தும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இச்சாலையில் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கும் நெரிசலைச் சமாளிப்பதற்கும் காவல் துறையினர் முழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :