ECONOMYMEDIA STATEMENT

கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்து நெரிசலானது

கோலாலம்பூர்,  மே 7:  வடக்கு – தெற்கு  விரைவுச்  சாலை  மற்றும்  கிழக்கு  கடற்கரை  விரைவுச்  சாலை  (எல்பிடி)  ஆகியவற்றில்  நேற்றிரவு  முதல்  நாளை  நள்ளிரவு  வரை  ஹரி ராயா பெருநாள்  விடுமுறைக்குப்  பிறகு  வீடு  திரும்புவதற்கு  மக்கள்  இலவசக்  கட்டணத்தைப்  பயன்படுத்திக்  கொள்வதால்  கிள்ளான்  பள்ளத்தாக்கு  செல்லும்  பிரதான  நெடுஞ்சாலையில்  போக்குவரத்து  நெரிசல்  ஏற்பட்டது.

மலேசிய  நெடுஞ்சாலை  ஆணையத்தின் (LLM)  செய்தித்  தொடர்பாளர்,  இன்று  நண்பகல்  நிலவரப்படி,  வடக்கு- தெற்கு  நெடுஞ்சாலையில்  கிள்ளான்  பள்ளத்தாக்கு  நோக்கிய  போக்குவரத்து  நெரிசல்  சுங்கை  பட்டாணி  செலாத்தானில் இருந்து பெர்த்தாம்,  பெர்மாத்தாங்  பாவிலிருந்து  பிறை  மற்றும்  ஜூருவில் இருந்து பண்டார்  காசியா  வரை  நெரிசல்  ஏற்பட்டது.

“சங்கட்  ஜெரிங்கில்  இருந்து  கோலா  கங்சார்,  புக்கிட்  மேராவில் இருந்து தைப்பிங்,  சுங்கை  பேராக்கில் இருந்து மெனோரா  சுரங்கப்பாதை,  ஈப்போவில் இருந்து சிம்பாங்  புலாய்,  குவா  தெம்புருங்கில்  இருந்து  தாப்பா,  தாப்பா  ஓய்வு மையத்திலிருந்து பீடோர், லாடாங் பிக்காமிலிருந்து சுங்கை  மற்றும்  புக்கிட்  பெருந்துங்கிலிருந்து ரவாங் வரை  10  கிலோமீட்டர்  வரை  போக்குவரத்து  நெரிசல்,”  என்று  பெர்னாமாவைத்  தொடர்பு  கொண்ட போது  அவர்  கூறினார்.

கிழக்குக்  கடற்கரையில்,  காராக்கில் இருந்து புக்கிட்  திங்கியை  நோக்கி  போக்குவரத்து நெரிசல்,  தெற்கில், ஸ்கூடாயில் இருந்து  கூலாய்,  யோங்  பெங்கிலிருந்து  பாகோ,  செனவாங்  ஓய்வுமையத்திலிருந்து போர்ட் டிக்சன்  வரையிலும்  போக்குவரத்து  நெரிசல்  இருப்பதாகவும்  அவர்  கூறினார்.

“கிள்ளான்  பள்ளத்தாக்கிலிருந்து  முக்கிய  நெடுஞ்சாலைகளில்  போக்குவரத்து  ஓட்டம்  அனைத்தும்  கட்டுப்பாட்டில்  உள்ளது,”  என்று  அவர்  கூறினார்.


Pengarang :