ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜெனராசி கெஅடிலான் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா, மே 9- இருபது ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட வெள்ளை ரிப்பன் இயக்கத்தை நினைவுக்கூறும் வகையில் ஜெனராசி கெஅடிலான் இயக்கம் நேற்று இங்கு நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பை நடத்தியது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய போராட்டத்தில் மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை நல்கி வரும் கட்சி உறுப்பினர்களுக்கு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் இந்த விருந்து நிகழ்வு நடத்தப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் யுஸ்மாடி யூசுப் கூறினார்.

இவ்வளவு காலமாக நாம் நடத்தி வந்த போராட்டத்தை நினைவுக் கூறும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. பல தியாகங்களைப் புரிந்த நமது முன்னாள் தலைவர்களை நாம் நினைவுக்கூற விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த விருந்து நிகழ்வில் கெஅடிலான் இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர்களும் புரோ 98 ரிபோர்மிஸ், ஒதாய் ரிபோர்மாசி, ஜிங்கா 13 ஆகிய போராட்ட அமைப்புகளின் தலைவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர் என்றார் அவர்.

இந்த விருந்து நிகழ்வில் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார், கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஸமான் ஹூரி, தாமான் மேடான் ஷம்சுல் பிர்டாவுஸ் முகமது சுப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :