ECONOMYHEALTHPBTSELANGOR

செந்தோசா சட்டமன்றம் தகுதியான இல்திஸாம்  சிலாங்கூர் பென்யாயாங்  பெறுநர்களை அடையாளம் கண்டு வருகிறது

ஷா ஆலம், மே 9: ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்ட உதவியைப் பெறத் தகுதியான குடியிருப்பாளர்களை செந்தோசா சட்டமன்றம் அடையாளம் கண்டு வருகிறது.

இதுவரை தகுதியான பெறுநர்களின் ஒதுக்கீட்டில் பாதி நிரப்பப்பட்டுள்ளது, அவர்களில் குறைந்த வருமானம் உள்ளவர்களும் அடங்குவர் என்று அதன் பிரதிநிதி டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

“மக்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உதவும் திட்டத்தை வழங்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது” என்று அவர் இன்று சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஏப்ரல் 18 அன்று, பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக மக்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்ட ஐ.எஸ்.பி திட்டம் நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் செயல்படுத்தப்படும் என்று டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

பரிவுமிக்க சிலாங்கூர் அர்ப்பணிப்புத் திட்டத்திலிருந்து மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் பலன்களை அதிகமான குடியிருப்பாளர்கள் அனுபவித்ததாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த ஐ.எஸ்.பி. திட்டத்தின் வழி அதிகமான மக்கள் பலன் பெறுவர். கிஸ் எனப்படும் பரிவுமிக்க அன்னைத் திட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்) வழி சுமார் 30,000 பேர் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் சொன்னார்.

பெருங்குடல் புற்றுநோயைக் கண்டறிய ஆண்களுக்கு ஸ்கிரீனிங்கை விரிவுபடுத்துவது உட்பட பொதுமக்களுக்கான சுகாதார முயற்சிகளையும் ஐ.எஸ்.பி திட்டம் மேம்படுத்தி வருகின்றனர்.


Pengarang :