ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வாகனமோட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்தினார்- போலீஸ்காரருக்கு சம்மன்

ஷா ஆலம், மே 16- கூட்டரசு நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய போலீஸ்காரர் ஒருவருக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டது.

கைப்பேசியை பயன்படுத்தியவாறு போலீஸ் சின்னம் பொறிக்கப்பட்ட புரோட்டான் பிரிவ் வாகனத்தை ஆடவர் ஒருவர் ஓட்டிச் செல்லும் 14 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் நேற்றிரவு பரவலாகப் பகிரப்பட்டது.

அந்த காணொளியில் காணப்பட்ட போலீஸ்காரருக்கு எதிராக குற்றப்பதிவு வழங்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமிட் அறிக்கை ஒன்றில் கூறினார்.

அந்த கார் பெட்டாலிங் நோக்கிச் செல்வது அந்த காணொளி மூலம் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் அழைக்கப்பட்டார். தவறிழைக்கும் அதிகாரிகள் மற்றும் கீழ் நிலை போலீஸ்காரர்கள் விஷயத்தில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த போலீஸ்காரர் கைப்பேசியை பயன்படுத்தியவாறு காரை ஓட்டும் காட்சி பரவலானதைத் தொடர்ந்து சட்டத்தை மீறிய அந்த போலீஸ்கார ருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி போது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


Pengarang :