ANTARABANGSAECONOMYSUKANKINI

சீ போட்டி- 19 தங்கப் பதக்கங்களுடன் ஆறாவது இடத்தில் மலேசியா

ஹனோய், மே 17– இங்கு நடைபெற்று வரும் 31வது சீ போட்டி நேற்றுடன் ஒன்பது நாட்களை கடந்து விட்ட நிலையில் மலேசிய அணி 19 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அந்த தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான போட்டியில் மலேசியா வழக்கமாக முதல் ஐந்து இடங்களில் ஒன்றைப் பெற்று வந்த நிலையில் நாட்டின் தற்போதைய நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சீ போட்டியில் மட்டும் மலேசியா ஆறாவது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சீலாட், ஜிம்னாஸ்டிக் மற்றும் தடகளப் போட்டிகளில் தலா ஒரு தங்கப்பதக்கத்தை மலேசியா பெற்றது. நேற்றைய நிலவரப்படி மலேசியா 19 தங்கம், 24 வெள்ளி மற்றும் 44 வெண்கலப்பதக்கங்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பதக்க பட்டியலில் நாடு ஐந்தாவது இடத்தில் இருந்தது.

உபசரணை நாடான வியட்னாம் 88 தங்கம், 54 வெள்ளி மற்றும் 55 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்திலும் 36 தங்கம், 38 வெள்ளி, 53 வெண்கலப் பதக்கங்களுடன் தாய்லாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளன.

மேலும், 36 தங்கம், 38 வெள்ளி மற்றும் 53 வெண்கலப் பதக்கங்களுடன் பிலிப்பைன்ஸ் மூன்றாவது இடத்திலும் 24 தங்கம், 25 வெள்ளி, 44 வெண்கலப் பதக்கங்களுடன் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் உள்ள வேளையில் 23 தங்கம், 36 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தோனேசியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.


Pengarang :