ANTARABANGSAECONOMYSUKANKINI

சீ போட்டி- கராத்தே வீரர் சூரிய சங்கர் குமித்தே 67 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்

ஹனோய், மே 19– இங்கு நடைபெற்று வரும் 13 வது சீ போட்டியில் நாட்டின் காரத்தே வீரர் எச். சூரிய சங்கர் தங்கப் பதக்கம் வென்று சாதனைப்  படைத்தார்.

முதன் முறையாக களம் கண்ட இளம் கராத்தே வீரரான அவர் குமித்தே 67 கிலோ பிரிவில் இந்தோனேசியாவின் ஹத்தாபியா தெபிங்கை 5-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றியாளராக வாகை சூடினார்.

இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் வியட்னாமின் டாங் ஹோங் சூனை 3-1 என்ற புள்ளிக் கணக்கிலும் பிலிப்பைன்சின் ஜோன் மேத்தியு கார்னலை 8-0 என்ற புள்ளிக் கணக்கிலும் தோற்கடித்து இறுதியாட்டத்திற்கு அவர் தேர்வு பெற்றார்.

இதனிடையே, கடந்த 2019 பிலிப்பைன்ஸ் சீ போட்டியில் 55 கிலோ குமித்தே பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற எஸ்.பிரேம் குமார் ஹனோய் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றார்.

இம்முறை 60 கிலோவுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் போட்டியிட்ட பிரேம் குமார் அரையிறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் அடி சபுத்ராவிடம் தோல்வியைத் தழுவினார்.


Pengarang :