ALAM SEKITAR & CUACAECONOMY

மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் பொருள்களை இறக்குமதி செய்யத் தடை- சிலாங்கூர் அரசு நடவடிக்கை

ஷா ஆலம், மே 20 – பிளாஸ்டிக் பொருள்களை  மறுசுழற்சிக்காக அல்லது அழிக்கும் நோக்கத்திற்காக சிலாங்கூரில் உள்ள தொழிற்சாலைகள் இறக்குமதி செய்வதை தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லாய் சியான் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குக்கேற்ப ஏற்ப பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதன் மூலம் நீடித்த வளர்ச்சியை  உறுதி செய்ய மாநில அரசு விரும்புகிறது.

இருப்பினும்,  கட்டுப்பாடற்ற கழிவு மேலாண்மையின் விளைவாக பிளாஸ்டிக் மாசுபாடு அனைத்து தரப்பினராலும் விரிவான அளவில் விரைந்து  கையாளப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகும். எனவே பிளாஸ்டிக் மாசு பிரச்சினையை தீர்ப்பதில் நாங்கள் மிகவும் தீவிரமாக இருக்கிறோம் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்நோக்கத்திற்காக, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வளாகங்களின் செயலாக்கம் தொடர்பான ஐந்து  கொள்கைகளுக்கு மாநில ஆட்சிக்குழு   ஒப்புதல் அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :