ANTARABANGSAECONOMYSUKANKINI

சீ போட்டியில் ஷர்மேந்திரன் தங்கம் வென்றார்

ஷா ஆலம், மே 20- வியட்னாமில் நடைபெற்று வரும் 13வது சீ விளையாட்டுப் போட்டியில் 75 கிலோவுக்குட்பட்ட ஆண்களுக்கான குமித்தே போட்டியில் தேசிய கராத்தே வீரர் ஆர்.ஷர்மேந்திரன் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த வெற்றியின்  மூலம் ஷர்மேந்திரன் இந்த சீ போட்டியில் தொடர்ச்சியாக மூன்று  தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான தேக்வாண்டோ போட்டியில் 80 கிலோ எடைப்பிரிவில் சயாபிக் ஜூபர் மூலம் மலேசியா மேலும் ஒரு தங்கப் பதக்கம் வென்றது.

இது தவிர, ஷாக் யூகி, டாமி இங், ஜிங்கிள் ஷக், யாப் யி மற்றும் மியா ஓங் ஆகியோர் அடங்கிய தேசிய ரிதம் ஜிம்னாஸ்டிக் அணியும் நேற்றைய ஆட்டத்தில் தங்கம் வென்றது.


Pengarang :