ECONOMYNATIONALSUKANKINI

ஆசிய கிண்ணப் கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவதே ஹரிமாவ் மலாயா அணியின் இலக்கு

கோலாலம்பூர், ஜூன் 2- நேற்று ஹாங் காங்குடன் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹரிமாவ் மலாயா அணி, 2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு ஏதுவாக அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் நாட்டின் கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைப்பதற்குரிய வாய்ப்பு தேசிய ஆட்டக்காரர்களுக்கு கிட்டியுள்ளதாக அக்குழுவின் அனுபவம் வாய்ந்த மத்திய திடல் ஆட்டக்காரர் சபிக் ரஹிம் கூறினார்.

சொந்த இடத்தில் விளையாடும் போது கிடைக்கும் சாதகங்களை விளையாட்டாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசிய குழு சம்பந்தப்பட்ட பெரும்பாலான ஆட்டங்கள் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறுகின்றன என்று ஜோகூர் டாருள் தாக்ஸிம்  ஆட்டக் காரரான அவர் தெரிவித்தார்.

இந்த அரிய வாய்ப்பு நமக்கு மறுபடியும் கிடைக்காது. விளையாட்டாளர்கள் அனைவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும். நாம் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றார் அவர்.

நேற்றிரவு நடைபெற்ற முதல் கட்ட நட்பு முறை ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணி ஹாங்காங்கை எதிர்கொண்டது. புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அது  வெற்றி பெற்றது.


Pengarang :