ANTARABANGSAECONOMYPENDIDIKAN

கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழா நாளை தொடங்குகிறது-10 லட்சம் வருகையாளர்களை ஈர்க்க இலக்கு

கோலாலம்பூர், ஜூன் 2– கடந்த ஈராண்டுகளாக இயங்கலை வாயிலாக நடத்தப்படு வந்த கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழா 2022 இம்முறை பொது மக்களின் நேரடி பங்கேற்புடன் நாளை தொடங்கி வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக வாணிக மையத்தில் பத்து நாட்களுக்கு நடைபெறும் இந்த புத்தக விழாவில் எழு லட்சம் முதல் பத்து லட்சம் வரையிலான பார்வையாளர்கள் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுவதாக புத்தக விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முகமது கைரி ஙகடிரோன் கூறினார்.

இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 200 விற்பனைக் கூடங்களில் சிங்கப்பூர், இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 200 புத்தக வெளியீட்டாளர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைக்கவுள்ளனர் என்று அவர் சொன்னார்.

இந்த புத்த விழாவுக்கு வருவோருக்கு கட்டணம் விதிப்பதில்லை என்ற பாரம்பரியத்தை இம்முறையும் தொடரவுள்ளோம். பள்ளி விடுமுறையின் போது இந்த புத்தக விழா நடைபெறுவதால் தங்கள் பிள்ளைகளுடன் இந்த விழாவுக்கு வருவதற்குரிய வாய்ப்பு பெற்றோர்களுக்கு கிட்டும் என அவர் குறிப்பிட்டார்.

கல்வியமைச்சின் கீழுள்ள மலேசிய தேசிய புத்தக மன்றத்தின் ஏற்பாட்டிலான இந்த 39 வது அனைத்துலக புத்தக விழாவுக்கு மலேசிய புத்தக தொழில்துறையினர் சங்கம் ஏற்பாட்டு ஆதரவை வழங்கியுள்ளது.


Pengarang :