ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் கெர்ஜாயா திட்டத்தில் இதுவரை 22,000 பேர் பங்கேற்பு- எம்.பி.ஐ. தகவல்

ஷா ஆலம், ஜூன் 12- சிலாங்கூர் மந்திரி பெசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகத்தினால் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சிலாங்கூர் கெர்ஜாயா வேலை வாய்ப்புத் திட்டத்தில் இதுவரை  22,000  பேர் பதிவு செய்துள்ளனர்.

பெருந்தொற்றுக்கு பின் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட இந்த திட்டத்தின் மூலம் 1,400 பேர் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளதாக எம்.பி.. தலைமை செயல்முறை அதிகாரி நோரித்தா முகமது சீடேக் கூறினார்.

வேலை தேடுவோர் பொருத்தமான வேலைகளைப் பெறுவதற்கும் முதலாளிகள் தங்களுக்கு பொருத்தமான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் உதவக் கூடிய ஒரு தளமாக இந்த திட்டம் அமைவதாக கூறிய அவர், வேலை தேடிக்கொண்டிருப்போர் எம்.பி.. அகப்பக்கத்தில் பதிந்து கொள்வதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற முடியும் என்றார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 200 முதலாளிகள் இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர். சில்லறை வணிகம் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களே இத்திட்டத்தில் அதிகம் பங்கேற்றுள்ளன என்றார் அவர்.

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்றம் மாநாட்டு மையத்தில் நடைபெறும் வேலை வாய்ப்புத் திட்டத்திலும் தாங்கள் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வேலை வாய்ப்பு தொடர்பான மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் எம்.பி.. முகப்பிடத்தில் தங்களைப் பதிவு செய்து  கொள்ளலாம் என அவர் கூறினார்.

மனித மூலதன மேலாண்மைத் திட்டமான சிலாங்கூர் கெர்ஜாயா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களா கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

 


Pengarang :