ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHSELANGOR

ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும்  நடவடிக்கையில்  இரசாயன புகை அடிக்கும் நடவடிக்கையை  எம்பிஏஜே  எடுத்துள்ளது

ஷா ஆலம், ஜூன் 14: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) கடந்த சனிக்கிழமையன்று தாமான் தாசிக் தம்பாஹான் பகுதியில் டிங்கி பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து புகை அடிக்கும் நடவடிக்கையை நடத்தியது.

கொசுக்கள் இரை தேடும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இரசாயன புகை அடிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக எம்பிஏஜே கூறியது.

“எம்பிஏஜே ஒவ்வொரு மாலையும் டிங்கி பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் புகை அடிக்கும் வேலையை செய்யும்.

எனவே, உங்கள் பகுதியை சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அகற்றி பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்க கூடிய அனைத்து கொள்கலன்களிலும் லார்வா விஷத்தை வைக்க எம்பிஏஜே அறிவுறுத்தியது.

ஊராட்சி மன்ற சட்டத்தின் பிரிவு 81 (c) இன் படி, “லார்வாக்களின் இனப்பெருக்கம்’ தொல்லையாக கருதப்படுகிறது, மேலும் ஊராட்சி மன்ற சட்டத்தின் 82வது பிரிவின் கீழ், தொல்லைகளை அகற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடுவதன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊராட்சி மன்றங்களின் ‘அறிவிப்புக்கு இணங்க தவறினால், ஒரு குற்றத்திற்கு RM 1,000.00 க்கு மிகாமல் அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு மிகாமல் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :