ECONOMYMEDIA STATEMENT

சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் பள்ளத்தில் தவறி விழுந்து மூவர் காயமடைந்தனர்

ஷா ஆலம், ஜூன் 16: கோலா சிலாங்கூர், ஜாலான் கிரேத்தா அப்பி லாமாவில்  குன்சி ஆயர் என்ற இடத்தில் இன்று அதிகாலை 5 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற கார் பள்ளத்தில் விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்தனர்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம், வாகனத்தில் இருந்த 30 வயதுக்குட்பட்ட அனைவரும், பள்ளத்தில் விழுந்த காரின் கூரையில் ஏறி, மீட்புக்காக காத்திருந்தனர்.

காலை 5.19 மணிக்கு விபத்து குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், கோலா சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு வந்தபோது, போலீசால் துரத்தப் பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து அக்கார் பள்ளத்தில் தவறி விழுந்தது கண்டு  பிடிக்கப்பட்டதாகவும் நோரஸாம் கூறினார்.

மேலும் இரண்டு பெண்களுக்கு கால்கள் முறிந்ததாகவும், ஒரு ஆணுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது,” அவர் கூறினார்.

காயமடைந்த வெளிநாட்டவர்கள் அனைவரும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :